எஸ்பிஐ வங்கி ஏடிஎம் கொள்ளை சம்பவம் தொடர்பாக மேலும் ஒருவர் கைது : விமானம் மூலம் அழைத்து வந்தனர்

எஸ்பிஐ வங்கி ஏடிஎம் கொள்ளை சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டள்ள நிலையில் மேலும் ஒருவரை தனிப்படை போலீசார் அரியானாவில் கைது செய்து விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்தனர்.;

Update: 2021-06-29 12:50 GMT

தமிழக எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம். மையங்களை குறிவைத்து ரூ.1 கோடிக்கு மேல் பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. வங்கி ஏ.டி.எம். மையங்களில் பணம் செலுத்தும் எந்திரங்களின் வாயிலாக நூதன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அரியானா மாநிலத்தைச் சேர்ந்த 10 கொள்ளையர்கள் இந்த கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றி இருந்தனர்.

திருட்டு சிசிடிவி காட்சிகளின் பதிவுகளை வைத்து சென்னை போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் அவர்கள் அரியானா மாநிலத்தை சேர்ந்த கொள்ளையர்கள் என தெரிய வந்ததையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் அரியானா சென்றனர்.

இந்த கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான அமீர் மற்றும் விரேந்தர் என்பவர்களை தனிப்படை போலீசார் ஹரியானாவில் கைது செய்து பின்னர் சென்னை அழைத்து வரப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டு போலீசார் காவலில் எடுத்து தொடர்ந்து விசாரணை நடத்தி பல்வேறு தகவல்களைத் திரட்டி வருகின்றனர்.

இந்தநிலையில் எஸ்பிஐ வங்கி ஏடிஎம் கொள்ளை சம்பவம் தொடர்பாக அரியானா நஜிம் உசைன் என்பரை டெல்லியில் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஏற்கனவே இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஒருவரை தனிப்படை போலீசார் கைது செய்து விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்தனர். இதையடுத்து தனிப்படை போலீசார் அவரை விசாரணைக்காக அழைத்துச்சென்றுள்ளனர்.

Tags:    

Similar News