ராமச்சந்திர ஆதித்தனாரின் 8-ஆம் ஆண்டு நினைவு நாள்: தமாக மாநில தலைவர் மரியாதை
ராமச்சந்திரஆதித்தனாரின் 8 ம் ஆண்டு நினைவுநாளையொட்டி அவரது உருவ படத்திற்கு தமாக மாநிலதலைவர் ஜி.கே. வாசன் மாலை அணிவித்தார்;
ராமச்சந்திர ஆதித்தனாரின் 8ம் ஆண்டு நினைவு நாளையொட்டி சென்னை ஆயிரம் விளக்கு மலை முரசு அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உருவ படத்திற்கு தமாக மாநில தலைவர் ஜி.கே. வாசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசியதாவது; அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியது அவரது பெருமைக்குரியது. அரசு போக்குவரத்து கழகங்கள், குடிநீர், மின்சாரம், தேயிலை வாரியம் போன்றவற்றில் பணி புரியும் ஊழியர்கள் கொரானாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அவர்களுக்கு போனசாக 25% வழங்க வேண்டும் என தமிழகஅரசை வலியுறுத்துகிறோம். ஜனநாயக முறைப்படி உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை. இயற்கையான முறையில் நடைபெறாமல் செயற்கையான முறையில் நடைபெற்றுள்ளது. இது போன்ற தேர்தல் இனிமேலும் நடைபெற கூடாது என்றார் ஜி.கே.வாசன்.