உஷாரய்யா உஷார்... சென்னையை கலங்கடிக்கும் கொரோனா..!
தமிழகத்தில் சென்னையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 33,222 ஆக அதிகரித்துள்ளது.;
சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ள கொரோனா பாதிப்பு நிலவரப்படி, சென்னையில் மொத்த கொரோனா பாதிப்பு 3,58,573 ஆகவும் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 33,222 ஆகவும் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் நேற்று மட்டும் 26,327 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 4,894 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பாதிப்பான 3,58,573 பேரில் 3,20,457 பேர் குணமடைந்துள்ளனர்.
இதுதவிர மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு விவரத்தையும் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. இதில் அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அம்பத்தூர், அடையாறு ஆகிய 5 மண்டலங்களில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 3 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.