தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் ஏன் திறப்பு? அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் ஏன் திறக்கப்படுகிறது என்பதற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

Update: 2021-06-12 09:50 GMT

வருகிற 14ம் தேதியில் இருந்து தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து,  எதிர்ப்பு குறித்த செய்தியாளர்கள் கேட்ட கேள்வி அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பதிலில், தமிழகத்தில் கொரோனா முதல் அலையின்போது தொற்று உச்சத்தில் இருந்த சமயத்தில் அப்போதைய அரசு டாஸ்மாக் கடைகளை திறந்துவைத்தது.

தற்போது, தமிழகத்தில் தொற்று எண்ணிக்கை குறைந்து தொற்றே இல்லை என்கிற நிலையை எட்டும் சமயத்தில்தான் அம்மாதிரியான முடிவை வருவாய்த்துறை எடுத்துள்ளது. முதல் அலையின்போது அரசு எடுத்த நடவடிக்கைகளுக்கும் இரண்டாம் அலையின்போது இந்த அரசு எடுப்பதற்கும் உண்டான பாகுபாடுகளை மக்கள் உணர வேண்டும்" என அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

Tags:    

Similar News