சென்னை : கொரோனா பெருந்தொற்று காலத்தில் தன்னலம் கருதாமல் இரவும் பகலும் பணியாற்றி வரும் மருத்துவர்களின் சேவையை பாராட்டும் விதமாக மருத்துவர்கள் தினமான இன்று டாக்டர். ரேலா மருத்துவமனையின் ஏற்பாட்டில் பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை கட்டிடம் ஆரஞ்சு நிற வண்ண விளக்குகளால் ஒளிமயமானது. ரிப்பன் மாளிகையின் வண்ண மயமான காட்சியை பொதுமக்கள் பலரும் பார்த்து ரசித்தனர்.