இ - சேவை மையங்கள் துவங்குவதற்கான ஆணை : அமைச்சர் வழங்கினார்

புதிய இ - சேவை மையங்கள் துவங்குவதற்க்கான முகமை ஆணைகளை 36 பேருக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார்

Update: 2022-01-23 04:26 GMT

அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி

சென்னை தலைமைசெயலகத்தில் நடைப்பெற்ற இந் நிகழ்விற்க்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாடு அரசு கேபிள்டிவி நிறுவனத்தின் கீழ் பிரவுசிங் சென்டர்கள் மூலம் புதிதாக 36 நபருக்கு இ சேவை மையம் அமைப்பதற்கான அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அரசின் அனைத்து திட்டங்களும் கணினி மயமாக்கப்பட்டு மக்களுக்கு எளிமையாக சென்றடைய வேண்டும் என்கிற நோக்கில் அரசு செயல்பட்டு வருவதாக கூறினார்.

முழுமையாக குடிமக்களுக்கு இணைய தளத்தில் மூலம் திட்டங்களை செயல்படுத்த முயற்ச்சி செய்து வருவதாக தெரிவித்த அவர்,

இசேவை 2.0 வெகுவிரைவில் நடைமுறைக்கு வந்ததும் தற்போது உள்ள இணையதள பிரச்சனைகள் சீரமைக்கப்படும் என கூறினார். தலைமை செயலகத்தில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் இணையதள பயிற்சி வழங்கப்பட்டுவருவதாக தெரிவித்தார்.

Tags:    

Similar News