மே 5 கடைகளுக்கு விடுமுறையா? விக்கிரமராஜா விளக்கம்

மே 5-ம் தேதி வணிகர் தினமாக இருந்தாலும், இந்தாண்டு தமிழகம் முழுவதும் கடைகள் இயங்கும் என்று, வணிகர் சங்க பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

Update: 2021-05-03 12:19 GMT

தமிழகம் முழுவதும் மே 5-ஆம் தேதி வணிகர் தினத்தை முன்னிட்டு கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இந்த வருடம் மட்டும் கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டாம் என்று வணிகர் சங்க பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வணிகர் சங்க பேரமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது: மே 5-ஆம் தேதி வணிகர் தினத்தை முன்னிட்டு, காலை 9 மணியளவில் சென்னை கே.கே.நகர் ராமசாமி தெருவில் உள்ள பேரமைப்புக்குச் சொந்தமான வளாகத்தில், வணிகக் கொடியேற்றும் நிகழ்ச்சியும், அன்று மாலை 4 மணியளவில் சென்னை கோயம்பேடு வணிக வளாகம் அருகில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறும். 

ஒவ்வொரு ஆண்டும் மே 5-ஆம் தேதி கடைகளுக்கு விடுமுறை அளித்த நிலையில், இந்த ஆண்டு மட்டும், ஞாயிற்றுக் கிழமைகளில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டும், வணிகர்களின் வாழ்வாதார நிலையை கருத்தில் கொண்டும், கடைகளுக்கு விடுமுறை அளிக்காமல், மாலையில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள், அரசின் வழிகாட்டுதல்களுடன், உரிய கட்டுப்பாடுகளுடனும், பாதுகாப்புடனும் நடைபெறும் என்று பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா அறிவித்துள்ளார்.

Tags:    

Similar News