மத்திய அமைச்சரவையில் தன் மகனுக்கு இடம் கிடைப்பதற்காக ஒன்றிய அரசு குறித்து கருத்து தெரிவித்து வருகிறார் ஓபிஎஸ்- தயாநிதி மாறன்
மத்திய அமைச்சரவையில் தனது மகனுக்கு இடம் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஓன்றிய அரசு குறித்து ஓபிஎஸ் கருத்து தெரிவிக்கிறார் என்று தயாநிதி மாறன் எம்பி தெரிவித்தார்.;
சென்னை அண்ணாநகர் தொகுதிக்குட்பட்ட சூளைமேடு நெல்சன் மாணிக்கம் ரோடு பகுதியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் கலந்து கொண்டு ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் கூறியதாவது.
சமூக செயற்பாட்டாளர் டேன் சாமி உயிரிழப்பு குறித்து பேசிய மாறன், எமர்ஜென்சியை விட மோசமான நிலை தற்போது நடைபெறுகிறது.
மக்கள் கருத்துக்களை பதிவிட முடியவில்லை பதிவிட்டால் தேசத்துரோக வழக்குகள் பதியப் படுகிறது இவற்றைஎல்லாம் பார்க்கும்போது எமர்ஜென்சியே பரவாயில்லை என்று தோன்றுகிறது
கொரோனா நோய்த்தொற்று தானாக குறைந்து விட்டதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறிய கருத்திற்கு பதிலளித்த அவர் தர்மாகோல் மன்னருக்கு குறித்து நான் பதில் கூற விரும்பவில்லை அதிமுக ஆட்சியில் தான் கொரோனா உச்சத்தில் இருந்தது தேர்தல் நேரத்தில் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் அதிமுகவினர் இருந்தனர்
திமுகவினர் ஆட்சியில் வருவதற்கு முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தடுப்பு வழிகளை செய்து வந்தவர்கள். முதல்வர் என்ற முறையில் தானே கொரோனா வார்டுக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஒரே முதல்வர் ஸ்டாலின் மட்டும் தான் ,
அதிமுகவினருக்கு பேசுவதற்கு எதுவுமில்லை எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என அறிவுரை கூறும் முதல்வரும் நம் முதல்வர் தான் என தெரிவித்தார் முக கவசங்கள் கட்டாயம் அணிய வேண்டும் என கேட்டுக்கொண்டார்
ஒன்றிய அரசு என கூறி திமுக பிரிவினையை ஏற்படுத்தி வருவதாக முன்னாள் துணை முதல்வர் ஓபிஎஸ் கூறிய கருத்திற்கு பதிலளித்த தயாநிதிமாறன், டெல்லியில் இருந்து ஒரு செய்தி வந்துள்ளது மத்திய அமைச்சரவை விரிவாக்கம் என்று ஒன்றிய அரசு குறித்து எதிர்ப்பு தெரிவித்தால் தன் மகனுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என கருத்து தெரிவித்து வருவதாக தயாநிதிமாறன் தெரிவித்தார்