கோவிட் -19 கையேடு : நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்டார்
கொரோனா தொற்று பாதித்து வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டவர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய கோவிட்-19 கையேட்டினை தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே. என்.நேரு இன்று வெளியிட்டார்.
பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் கொரோனா நோய் குறித்து தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முழு விபரங்கள் அடங்கிய 16 பக்கங்கள் கொண்ட கோவிட்-19 விழிப்புணர்வு தயார் செய்யப்பட்டுள்ளது. இதில் கொரோனா பாதித்தவர்கள் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள், சிகிச்சை பெறும் இடங்கள், அவசர கால தொடர்பு எண்கள், முதலுதவி நடவடிக்கைகள் மற்றும் தடுப்பு ஊசி செலுத்தி கொள்வதன் அவசியம் போன்ற விவரங்கள் விளக்கப்பட்டுள்ளது.
கொரோனா நோய்த்தொற்று பாதித்து தனிமைப்படுத்திக் கொண்டவர்கள் அவர்களின் இல்லத்திற்கே களப்பணியாளர்கள் மூலம் கோவிட்-19 கையேடு நாளை முதல் விநியோகம் செய்யப்படுகிறது. என சென்னை பெருநகர மாநகராட்சி நிர்வாகம் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.