முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் மாமனார் மரணம்
முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் மாமனார் தங்கராஜ் வயது முதிர்வின் காரணமாக சென்னையில் காலமானார்.;
அதிமுக முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் மாமனார் தங்கராஜ் (86) வயது முதிர்வின் காரணமாக சென்னை அண்ணாநகர் திருமங்கலத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலமானார்.
இதனையடுத்து அதிமுக நிர்வாகிகள் அவர்களது இல்லத்திற்கு சென்று அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார் .
இதைப்போல் கன்னியாகுமரி எம்பி விஜய் வசந்த். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொது செயலாளர் காமராஜ், வர்த்தக காங்கிரஸ் மாநில செயல் தலைவர் ராமசாமி, உட்பட பலரும் அஞ்சலி செலுத்தினர்.