குடும்ப நுாலக உறுப்பினர் அட்டை வழங்கும் திட்டம்: ஷெனாய் நகரில் வாசகர்கள் ஆர்வம்

ஷெனாய் நகரில் குடும்ப நுாலக உறுப்பினர் அட்டை வழங்கும் திட்டத்தில் வாசகர்கள் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர்.;

Update: 2021-09-13 04:20 GMT

 ஷெனாய் நகரில் உள்ள வட்டார நுாலகம்.

சென்னை, ஷெனாய் நகரில் உள்ள வட்டார நுாலகத்தில், சிறுவர் முதல் பெரியோர் வரை குடும்ப உறுப்பினர் திட்டத்தில் ஆர்வமுடன் சேர்ந்து பயனடைந்து வருகின்றனர்.

அனைவருக்கும் வாசிப்புத் திறனை ஊக்குவிக்கு வகையில், வட்டார நுாலகங்களில், 'குடும்ப நுாலக உறுப்பினர் அட்டை வழங்கும் திட்டம்' செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், ஒரே குடும்பத்தில் உள்ள அதிகபட்சம் 5 பேர் உறுப்பினர்களாக சேர்ந்து, நுால்களை பெற்று செல்லலாம். இத்திட்டத்தில், சிறுவர்கள் முதல் பெரியோர் வரை ஏராளமானோர் பயனடைந்து வருகின்றனர்.

அண்ணாநகர்,  ஷெனாய் நகர் வட்டார நுாலகத்தில் இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. குடும்பத்தில் உள்ள சிறுவர்கள் முதல் பெரியோர் வரை, அனைவரது வாசிப்பு திறனையும் ஊக்குவிக்கும் வகையில், இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் ஷெனாய் நகரில் 25க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இணைந்துள்ளது.

Tags:    

Similar News