வாகன தணிக்கையில் வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு -ரூ.2.85 கோடி ரூபாய் வசூல்

வாகன தணிக்கையின் போது, வரி மற்றும் அபராதத் தொகையாக ரூ.2.85 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-09-26 03:48 GMT

வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலர் ஜோதி நிர்மலாசாமி வெளியிட்ட அறிக்கை: அரசுக்கு சேர வேண்டிய வரி வருவாய் உரிய காலத்தில் பெறப்படுவதை உறுதி செய்யும் விதத்தில், அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வணிக வரித் துறையின் புலனாய்வு சார்ந்த நடவடிக்கைகளை மேலும் வலுவாக்குவது, ரோந்து பணி குழுக்கள் மூலமாக, பட்டியல் இல்லாமல் செல்லும் வாகனங்களை தணிக்கை செய்வது போன்ற முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றது.

கடந்த 6ம் தேதி முதல், 19ம் தேதி வரையில், தமிழகத்தில் உள்ள அனைத்து வணிக வரி நுண்ணறிவுப் பிரிவு அலுவலகங்கள் மூலமாக 26 ஆயிரத்து 207 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டது

அவற்றில், 32 ஆயிரத்து 892 மின்னணு வழிப்பட்டியல்கள் சரிபார்க்கப்பட்டது. வழிப்பட்டியல் இல்லாமல் சென்ற சுமார் 530 வாகனங்கள் மீது குற்றம் பதிவு செய்யப்பட்டு, அவர்களிடம் வரி மற்றும் அபராதத் தொகையாக ரூ.2.85 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டது. இத்தகைய தணிக்கைகள் தொடர்ந்து செய்யப்படும் இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News