இன்று கொரோனா தடுப்பூசி முகாம்கள் செயல்படாது, சென்னை மாநகராட்சி அறிவிப்பு
தடுப்பூசிகள் தட்டுப்பாடு காரணமாக இன்று கொரோனா தடுப்பூசி முகாம்கள் செயல்படாது என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.;
மூன்று நாட்கள் இடைவேளைக்கு பிறகு நேற்று சென்னையில் கொரோனா தடுப்பூசி மையங்கள் செயல்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பு ஊசிகள் செலுத்தப்பட்டது. நேற்றைய தினம் கூட மிகக் குறைந்த எண்ணிக்கையிலான தடுப்பூசிகள் தான் மக்களுக்கு செலுத்தப்பட்டு இருந்தன.
இந்த சூழலில் இன்று மீண்டும் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக இன்றைய தினம் தடுப்பூசி மையங்கள் செயல்படாது என சென்னை மாநகராட்சி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை இதுவரை 26,50,000 க்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.