சென்னை: மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்தன் போக்சோ சட்டத்தில் கைது
சென்னை மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்தன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.;
சென்னை அயனாவரத்தில் உள்ள மகரிஷி வித்யா மந்திர் பள்ளியிலும் ஆசிரியர் மீது மாணவி பாலியல் புகார் அளித்ததை தொடர்ந்து அப்பள்ளியின் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு வணிகவியல் ஆசிரியர் ஆனந்தனை பணி இடைநீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.
இந்நிலையில் மாணவியின் புகாரின் அடிப்படையில் கீழ்ப்பாக்கம் மகளிர் போலீசார் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்தனை இன்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.