3,401 மனுக்கள் பெறப் பட்டுள்ளது, இந்து சமய அறநிலையத்துறை தகவல்
கோரிக்கைகளை பதிவிடுக என்ற திட்டம் மூலம் 3,401 மனுக்கள் பெறப்பட்டுள்ளது என்று இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.;
மக்கள் தங்களது கோரிக்கைகளை பதிவிட ஏதுவாக மே மாதம் புதிய இணையதளம் தொடங்கப்பட்டிருந்தது.கோயில் புதுப்பித்தல், ஆக்கிரமிப்புகள் மீட்பு, கோயில் பணியாளர்களுக்கான ஊதியம் பற்றி மனுக்கள் வந்துள்ளன.
மனுக்கள் மண்டல வாரியான அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறநிலையத்துறை தெரிவித்திருந்தது.