உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் ரூ.2,577 கோடி அரசுக்கு இழப்பு, நிதி அமைச்சர்
அதிமுக அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்தாததால் அரசுக்கு ரூ.2,577 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் தெரிவித்தார்.
தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையில், துறை வாரியாக ஏற்பட்டுள்ள இழப்புகள் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், சரியான நேரத்தில் அதிமுக அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்தாததால் அரசுக்கு ரூ.2,577 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசுக்கு குடிநீர் கட்டண பாக்கி ரூ,1,743 கோடி உள்ளது.
தமிழ்நாட்டின் மொத்த உற்பத்தி 8.7 சதவீதமாக குறைந்துள்ளது.
மறைமுக கடனாக ரூ.39 ஆயிரத்து 74 கோடி வாங்கப்பட்டுள்ளதாக
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.