தமிழகம் முழுவதும் 12 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்; அரசு அதிரடி உத்தரவு

தமிழகம் முழுவதும் 12 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Update: 2021-07-27 17:18 GMT

தமிழகம் முழுவதும் 12 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

அந்த உத்தரவில், ரயில்வே ஐஜியாக பணியாற்றும் சுமித்சரண் ஊர்க்காவல்பிரிவு ஐஜியாகவும், பொருளாதார குற்றப்பிரிவு ஐஜியாக பணியாற்றும் தினகரன் சிலைகடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி.,யாகவும், திருச்சி ஆயுதப்படை டிஐஜியாக பணியாற்றும் கயல்விழி சென்னையில் உள்ள காவலர் பயிற்சிப்பள்ளி டிஐஜி.,யாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

திருவாரூர் மாவட்ட எஸ்பியாக பணியாற்றும் சீனிவாசன் திண்டுக்கல் மாவட்ட எஸ்பி.யாகவும்,  சிபிசிஐடி சிறப்பு பிரிவு எஸ்பி.யாக பணியாற்றும் விஜயகுமார் திருவாரூர் மாவட்ட எஸ்.பி.யாகவும், திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி.யாக பணியாற்றி வரும் ரவாளிபிரியா தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி.யாவும் மாற்றப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி.யாக பணியாற்றும் தேஷ்முக் சேகர் சஞ்சய் ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி.யாகவும், ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி.யாக பணியாற்றி வரும் ஓம் பிரகாஷ் மீனா சைபர் கிரைம் எஸ்.பி.யாகவும்,  அடையார் துணை கமிஷனராக பணியாற்றி வரும் விக்கிரமன் சிபிசிஐடி சிறப்பு பிரிவு எஸ்.பி.யாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

சென்னை மெட்ரோ ரயில் பாதுகாப்பு அதிகாரியாக இருந்து மாற்றப்பட்ட தேவராணி சைபர்கிரைம் எஸ்.பி.-3 யாகவும், சைபர் கிரைம்2 பிரிவு எஸ்.பி.யாக பணியாற்றி வரும் அருண் பாலகோபாலன் செயிண்ட் தாமஸ் மவுண்ட் துணை கமிஷனராகவும், டிஜிபி அலுவலகத்தில் நில அபகரிப்பு பிரிவு துணை கமிஷனராக பணியாற்றும் ஷியாமளா தேவி சென்னை மாநகர பெண்கள் மற்றும் குழந்தைகள் வன்முறை தடுப்பு பிரிவு துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News