டெல்டா பிளஸ் கொரோனா தொற்றால் 10 பேர் பாதிப்பு :அமைச்சர் மா சுப்பிரமணியன் தகவல்

தமிழகத்தில் டெல்டா பிளஸ் வகை கொரோனா தொற்றால் இதுவரை 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.

Update: 2021-06-29 13:01 GMT

சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் ( பைல் படம்)

தமிழகத்தில் டெல்டா பிளஸ் வகை கொரோனா தொற்றால் இதுவரை 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.

முன்னதாக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரோட்டரி சங்கம் சார்பில் வழங்கிய 50 ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரங்களை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெற்றுக் கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, தமிழகத்தில் கொரோனா தொற்றுபாதிப்பு வேகமாக குறைந்து வருகிறது. ஆனாலும், பொதுமக்கள் முகக் கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அடிக்கடி சோப்புபோட்டு கைகளை கழுவ வேண்டும். தேவையில்லாமல் வெளியேவருவதை தவிர்க்க வேண்டும்.

தமிழகத்தை பொறுத்தவரை, டெல்டா பிளஸ் வகை கொரோனா வைரஸ் தொற்று கடந்த ஏப்ரல், மே மாதங்களில் வந்துவிட்டது. தொற்று பரவல் அதிகம் உள்ள பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாதிரிகளை எடுத்து பெங்களூரு ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது.

இதில், 10 பேருக்கு இந்த வைரஸ் இருப்பது தெரியவந்துள்ளது. மதுரையை சேர்ந்த நபர் மட்டும் உயிரிழந்துள்ளார். மற்ற 9 பேரும்நலமுடன் உள்ளனர். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதனை செய்ததில் யாருக்கும் பாதிப்பு இல்லை. இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News