மின் கணக்கீட்டிற்கு புதிய செயலி; அதிகாரிகளுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்
மின் கணக்கீட்டை தெரிந்து கொள்ள புதிய செயலியை அறிமுகப்படுத்துமாறு அதிகாரிகளிடம் தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.;
சென்னை தலைமைச் செயலகத்தில், ஸ்டாலின் தலைமையில் எரிசக்தித்துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், மின் நுகர்வோர்களுக்கான சேவையை மேலும் மேம்படுத்த மின் அளவீடு மற்றும் கணக்கீட்டை மொபைல் மூலம் தெரிந்துகொள்ளும் வகையில் புதிய செயலியை உருவாக்க வேண்டும், மேலும் குறைந்த மின்னழுத்த குறைபாடுகளை சரிசெய்யும் வகையில் திட்டங்களை வகுக்க வேண்டும் என்றும் அதிகாரிகளிடம் ஸ்டாலின் வலியுறுத்தினார்.