அமமுக,ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்
அமமுக,ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்;
சேலம் கிழக்கு மாவட்டம், அ.ம.மு.க. கட்சியின் மாவட்ட அம்மா பேரவை தலைவர் எம்.காட்டுராஜா (எ) பழனிசாமி தலைமையில் கட்சியினர் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இதைப்போல் மதுரை வடக்கு மாவட்டம், அ.ம.மு.க. மாநில அம்மா பேரவை துணைச் செயலாளரும்,மேலுார் தொகுதி அமுமுக வேட்பாளராக போட்டியிட்டவருமான செல்வராஜ் திமுகவில் இணைந்தனர்.
ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர் சீனிவாசன், மத்தியசென்னை மாவட்டச் செயலாளர் ராஜா கரூர் மாவட்டச் செயலாளர் பகவான் பிடி.பரமேஸ்வர் ஆகியோரும் திமுகவில் இணைந்தனர்.