சென்னையில் நீலாங்கரையில் அம்மா உணவக ஊழியர்கள் போராட்டம்
சென்னை நீலாங்கரையில் அம்மா உணவக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் அம்மா உணவகத்தை மூட வேண்டும் என்ற நோக்கத்தில் வேலை நேரத்தில் மாற்றம் செய்துள்ளனர் என கூறி, சென்னை நீலாங்கரையில் உள்ள அம்மா உணவக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் ஊழியர்கள் 25 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் சுழற்சி முறையில் பணியாற்றி வந்த நிலையில் தற்போது ஒரு நாள் விட்டு ஒரு நாள், என்ற விதத்தில், அதாவது ஒரு நாள் 12 பேரும் மற்றொரு நாள் 12 பேர் என்ற அடிப்படையில் பணிபுரியுமாறு மேலதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதனால் பாதி சம்பளம் தான் கிடைக்கும், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறி தினந்தோறும் பணிசெய்யும் நடைமுறைக்கே கொண்டு வரக்கோரி உணவக ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அதிகாரிகளிடம் கடும் வாக்கு வாதம் செய்து வருகின்றனர். இது அம்மா உணவகத்தை மூட வேண்டும் என்ற நோக்கத்தில் தெரிவிக்கப்படுள்ளது என்ற சந்தேகம் எழுப்புவதாக ஊழியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.