அம்பத்தூர் தொழிற்பேட்டை ரப்பர் பெல்ட் கிடங்கில் தீ விபத்து

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ரப்பர் பெல்ட் கிடங்கில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2021-07-02 14:18 GMT

அம்பத்தூர் தொழிற் பேட்டையில் தீ பிடித்து எரியும் ரப்பர் பெல்ட் கிடங்கு.

சென்னை : அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ரப்பர் பெல்ட் கிடங்கில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தீ பிடித்ததில் ரப்பர் பொருட்கள் எரிந்து கரும்புகை வெளியேறி வருவதால் கிடங்கு அருகே உள்ள குடியிருப்புவாசிகள் முன்னெச்சரியாக வெளியேற்றப்பட்டனர்.

ரப்பர் பெல்ட் கிடங்கில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீப்பிடித்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News