சென்னையில் நாளை மின் விநியோகம் நிறுத்தப்படும் இடங்கள்
மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் சென்னையில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையில் நிறுத்தப்படும்.;
மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக நாளை அம்பத்துார் பகுதியும் நாளை மறுதினம் ஆவடி,கீழ்பாக்கம், மாத்துார் ஆகிய பகுதியில் மின் விநியோகம் நிறுத்தம் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் சென்னையில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையில் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மீண்டும் மின் விநியோகம் கொடுக்கப்படும். மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக நாளை அம்பத்துார் பகுதியும் நாளை மறுதினம் ஆவடி,கீழ்பாக்கம், மாத்துார் ஆகிய பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்பட இருக்கிறது.
நாளை நிறுத்தப்படும் அம்பத்துார் பகுதி : அம்பத்துார் தொழிற்பேட்டை 3 வது மெயின் ரோடு, சின்ன காலனி, பெரிய காலனி, நக்கிரன் ரோடு, நடசேன் நகர், பள்ளி தெரு, ஆச்சி மசாலா தெரு, குப்பம் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.
நாளை மறுதினம் நிறுத்தப்படும் ஆவடி வடக்கு பகுதி : முருகப்பா பாலிடெக்னிக், திருமுல்லைவாயல் காவல் நிலையம், பி.எஸ்.என்.எல் - சி.டி.எச் சாலை, எச்.வி.எப் சாலை, ஆவடி பஸ் டெப்போ, செக் போஸ்ட், என்.எம் சாலை, நந்தவன் மேட்டுர், கஸ்தூரி பாய் நகர்.
கீழ்பாக்கம் பகுதி :கீழ்பாக்கம் கார்டன் விரிவு, கே.எச் ரோடு, தாகூர் நகர், அயனாவரம், அண்ணா நகர் ஒ மற்றும் எல் பிளாக், நியூ கொளத்தூர் துணைமின் நிலையம் பகுதி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்,
மாத்துார் பகுதி : சின்ன மாத்துார், எம்.எம்.டி.ஏ 1வது மற்றும் 2வது மெயின் ரோடு பகுதி, ஓமகுலம் தெரு, சக்தி நகர் மற்றும் நேரு நகர், பெருமாள் கோயில் தெரு மற்றும் டெலிகாம் நகர், அச்சிஸ் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையில் நிறுத்தப்படும்.மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மீண்டும் மின் விநியோகம் வழங்கப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.