உயர்சிறப்புமருத்துவம்படிக்க உள்ளூர் மருத்துவருக்குவாய்ப்புவழங்கசட்டம்: ராமதாஸ்

50 சதவீத இடங்கள் உள்ளூர் அரசு டாக்டர்களுக்கு மட்டும் ஒதுக்கப்பட வேண்டும். இதற்குபுதிய சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றார்

Update: 2021-08-09 17:02 GMT

பைல் படம்

உயர்சிறப்பு மருத்துவப் படிப்புக்கு உள்ளூர் அரசு மருத்துவர்களுக்கு வாய்ப்பு வழங்க தமிழக அரசு சட்டம் கொண்டு வர வேண்டுமென பாமக நிறுவனர் மருத்துவர் எஸ். ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில், தமிழக அரசின் செலவில் உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளை படித்த, பிற மாநில மருத்துவர்கள், ஒப்பந்தப்படி தமிழகத்தில் பணி செய்ய முன்வராமல், தங்கள் சொந்த மாநிலங்களுக்கு சென்று விட்டதாக வெளியாகியுள்ள செய்திகள், அதிர்ச்சியளிக்கிறது. தமிழக மக்களின் வரிப்பணத்தில் படித்தவர்கள் மக்களுக்கு சேவை செய்யாமல் ஏமாற்றுவது கண்டிக்கத்தக்கது.

தமிழக மக்களின் வரிப்பணத்தில் அதிக மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கி, அவற்றில் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளை நடத்துகிறது. ஆனால், அதில் தமிழக மாணவர்கள் படிக்க முடியாது, பிற மாநில மாணவர்கள் தான் படிப்பர் என்பதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும். இந்த அநீதிக்கு முடிவு கட்ட 2017 ஆண்டுக்கு முன்பிருந்ததைப் போன்று, தமிழகத்தில் உயர்சிறப்பு மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வை நடத்தும் அதிகாரம் தமிழக அரசிடமே வழங்கப்பட வேண்டும்.

50 சதவீத இடங்கள் உள்ளூர் அரசு டாக்டர்களுக்கு மட்டும் ஒதுக்கப்பட வேண்டும். இதற்கு வசதியாக இந்திய மருத்துவக் கவுன்சில் விதிகளில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறும் வகையில் புதிய சட்டத்தை தமிழக அரசு வரும் கூட்டத்தொடரில் நிறைவேற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப்பெற வேண்டும் என்று  அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News