அயப்பாக்கம் ஊராட்சியில் மெகா தடுப்பூசி முகாம் : துவக்கி வைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அயப்பாக்கம் ஊராட்சியில் நேற்று நடந்த மெக தடுப்பூசி முகாமை அமைச்சர் மா.சுப்ரமணியன் தொடங்கி வைத்தார்.

Update: 2021-12-12 02:45 GMT

அயம்பாக்கம் ஊராட்சியில் நேற்று நடந்த கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை அமைச்சர் மா.சுப்ரமணியன் தொடங்கி வைத்தார்.

திருவள்ளுர் மாவட்டம் வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம் அயப்பாக்கம் முதல் நிலை ஊராட்சியில்  14 வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றதுன்.

அயப்பாக்கம் பழைய காவல் நிலைய வளாகத்தில் நடைபெற்று வரும் மெகா தடுப்பூசி முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர்  சிறப்பு தடுப்பூசி முகாமில் இரண்டாம் தவணை தடுப்பூசி தெளித்துக் கொள்ள வந்தவர்களுக்கு மின்கலன் கொசு மட்டைகளை பொது மக்களுக்கு வழங்கினார் அமைச்சர் சுப்பிரமணியன். 

கண் பார்வை குறைபாடு உள்ள பள்ளி மாணவ மாணவியர் 50 பேருக்கு இலவச மூக்கு கண்ணாடி வழங்கும் திட்டத்தையும் அமைச்சர் துவங்கி வைத்தார் பின்னர் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் தடுப்பூசி போடும் பணிகளை நேரில் ஆய்வு செய்தார் உடன் அயப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் துரை வீரமணி ஊராட்சி ஒன்றிய சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்ரமணியன். கூறுகையில்

இந்தியாவில் பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்காக இதுவரை அறிவுறுத்த படவில்லை. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் தமிழகத்திற்கான உரிய நடவடிக்கைகள் அரசு மேற்கொள்ளப்படும்  என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்  மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்  

Tags:    

Similar News