மேகதாது அணை விவகாரம் தொடர்பாக டெல்லி செல்லும் முன்னாள் அதிமுக அமைச்சர் பேட்டி

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக டெல்லிக்கு செல்லும் அனைத்துக் கட்சி குழுவின் அதிமுக பிரதிநிதி முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேட்டி அளித்தார்.;

Update: 2021-07-16 07:07 GMT

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக டெல்லி செல்லும் அனைத்துக் கட்சி குழு அதிமுக பிரதிநிதி முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேட்டி அளித்தார்.

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் திமுக, அதிமுக உள்ளிட்ட 13 கட்சி பிரதிநிதிகள் டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சரை இன்று சந்தித்து பேச உள்ளனர். இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக

இன்று காலை  அதிமுக சார்பில் முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்  டெல்லி புறப்பட்டார். அப்போது விமானநிலையத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டி:

அனைத்து கட்சி கூட்டத்தில் எடுத்த தீர்மானத்தின் படி அனைத்து கட்சி தலைவர்கள் மத்திய ஜல் சக்தி துறை அமைச்சரே இன்று சந்திக்கின்றோம்.

அதிமுக தமிழகத்துக்கு என்றைக்குமே முழு ஆதரவாக இருக்கும். விவசாயிகள் மற்றும் டெல்டா பகுதிகள் நலன் கருதி தமிழ்நாடு அரசு எடுக்கக்கூடிய ஆக்கபூர்வமான நடவடிக்கை அதிமுக முழு ஆதரவு அளிக்கும்

மேகதாது அணை விவகாரத்தில் திமுக திசை மாறாமல், சரியான பாதைக்கு செல்லும் என்று நம்பிக்கை இருக்கின்றது. திமுக சரியான பாதைக்கு செல்லும்போது எங்களது முழு ஆதரவு உண்டு.

மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழு அமைப்பது போன்ற விஷயங்களெல்லாம் போராடி பெற்றது அதிமுக அரசுதான். மேகதாது அணை விஷயத்திலும் தமிழகத்துக்கு பெரிய வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

Tags:    

Similar News