விதி மீறி விமானத்தில் புகை பிடித்தவர் கைது

விமான விதிமுறைகளை மீறி புகைபிடித்து ரகளை செய்த பயணி கைது செய்யப்பட்டார்.;

Update: 2021-04-02 09:56 GMT

டில்லி-சென்னை விமானம் நடுவானில் பறந்தபோது,விமான விதிமுறையை மீறி,விமானத்திற்குள் புகைப்பிடித்து ரகளை செய்த வேலூா் பயணி சென்னை விமானநிலைய போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.

இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் நேற்று இரவு டில்லியிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்தது. அந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது,  விமானத்தில் பயணம் செய்த வேலூரை சோ்ந்த யாமின்ஷபி(32) என்ற பயணி சிகரெட் பிடித்து,புகையை சக பயணிகள் முகத்திற்கு நேராக ஊதினாா். இதையடுத்து விமானத்திற்குள் புகைப்பிடிக்கக்கூடாது என்ற தடையை எடுத்துக்கூறி,சகபயணிகள் புகைப்பிடிக்க ஆட்சேபம் தெரிவித்தனா். ஆனால் யாமின்ஷபி தொடா்ந்து சிகரெட் பிடித்தாா்.

இதையடுத்து விமான பணிப்பெண்கள் வந்து பயணியை எச்சரித்தனா். ஆனால், அவா் அவா்களிடமும் வாக்குவாதம் செய்தாா். இதையடுத்து விமான பணிப்பெண்கள் தலைமை விமானியிடம் தெரிவித்தனா். உடனே தலைமை விமானி சென்னை விமானநிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தாா்.

இதையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் சென்னை விமானநிலையத்தில் அந்த விமானம் தரையிறங்குவதை எதிா்பாா்த்து ஓடுபாதை அருகே தயாராக நின்றனா்.நேற்று இரவு 10 மணிக்கு இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் சென்னை உள்நாட்டு விமானநிலையம் வந்து தரையிறங்கியது. உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்திற்குள் சென்று புகைப்பிடித்து ரகளை செய்த பயணியை விமானத்திலிருந்து கீழே இறக்கி விசாரணை நடத்தினா்.

அதன்பின்பு இண்டிகோ ஏா்லைன்ஸ் அதிகாரி புகாரின் பேரில்,பயணியை சென்னை விமானநிலைய போலீசில் ஒப்படைத்தனா்.போலீசாா் இதுபற்றி மேலும் விசாரணை நடத்துகின்றனா்.பயணி யாமின்ஷபி வேலூரில் தனியாா் நிறுவனத்தில் வேலை செய்பவா். டில்லியில் நடந்த உறவினா் திருமண விழாவில் கலந்துகொள்ள டில்லி சென்றுவிட்டு விமானத்தில் திரும்பி வந்துள்ளாா்.

Tags:    

Similar News