அம்பத்தூர் தனியார் நிறுவனத்தில் தீ: ரூ.1 கோடி பொருட்கள் சாம்பல்
அம்பத்தூர் தனியார் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாகின.
சென்னை அம்பத்தூர் ஆவின் பால் பண்ணை அருகே தனியாருக்கு சொந்தமான தார்பாய் தயாரிக்கும் கம்பெனி இயங்கி வருகிறது. இன்று அதிகாலை, 3 மணியளவில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கப்பட்டது.
தகுதி அடிப்படையில் அம்பத்தூர், வில்லிவாக்கம், கோயம்பேடு, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 8 தீயணைப்பு வாகனங்களில் சென்ற தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் தார்பாய் கம்பெனி நிர்வாக இயக்குனர் கேசவலு என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.