சென்னை விமான நிலையத்தில் தலைமறைவு குற்றவாளி கைது
பணமோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளி சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.;
பணமோசடி வழக்கில் 7 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ஹைதராபாத் ஆசாமி மலேசியாவிலிருந்து விமானத்தில் வந்தபோது சென்னை விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சோ்ந்தவா் சபீப்சாகீத்(28). இவா் வேலைவாங்கித் தருவதாக சிலரிடம் பணம் மோசடி செய்ததாக ஹைதராபாத் சிட்டி போலீஸ் கடந்த 2014 ஆம் ஆண்டில் வழக்குப்பதிவு செய்து தேடிவந்தது. ஆனால் இவா் போலீசிடம் சிக்காமல் கடந்த 7 ஆண்டுகளாக தொடா்ந்து தலைமறைவாக இருந்து வந்தாா்.
இதற்கிடையே சபீப்சாகீத் வெளிநாட்டிற்கு தப்பியோடி தலைமறைவாகி விட்டதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து ஹைதராபாத் போலீஸ் kamitionar சபீத்சாகீத்தை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தாா்.அதோடு அனைத்து சா்வதேச விமானநிலையங்களும் சபீப்சாகீத் மீது லுக் அவுட் நோட்டீஸ் (LOC) பிறப்பித்திருந்தது.
இந்நிலையில் மலேசியா தலைநகா் கோலாலம்பூரிலிருந்து ஏா்இந்தியா எக்ஸ்பிரஸ் சிறப்பு விமானம் நேற்று இரவு சென்னை சா்வதேச விமானநிலையம் வந்தது.அதில் வந்த பயணிகளின் பாஸ்போா்ட், ஆவணங்களை சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதனையிட்டனா்.
அந்த விமானத்தில் 7 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த சபீப்சாகீத்தும் வந்தாா். இவா் தலைமறைவு குற்றவாளி என்பதை கண்டுப்பிடித்த குடியுரிமை அதிகாரிகள்,சபீப் சாகீத்தை வெளியில் அனுப்பாமல் பிடித்து ஒரு அறையில் அடைத்து வைத்தனா். அதோடு ஹைதராபாத் போலீசுக்கும் தகவல் கொடுத்தனா்.ஹைதராபாத் போலீசின் தனிப்படையினா் 7 ஆண்டு தலைமறைவு குற்றவாளி சபீப்சாகீத்தை கைது செய்து அழைத்து செல்ல சென்னை வந்து கொண்டிருக்கின்றனா்.