மாஸ்க்கிற்குள் தங்கம் : நூதன கடத்தல் - விட்ருவோமா..?
சென்னை ஏர்போர்ட்டில் மாஸ்க்கிற்குள் மறைத்து தங்கம் கடத்தி வந்த பயணி கைது செய்யப்பட்டார்.
முகத்தில் அணிந்திருந்த மாஸ்க்கிற்குள் தங்க பேஸ்ட்டை மறைத்து வைத்து துபாயிலிருந்து நூதனமாக கடத்திவந்த புதுக்கோட்டை பயணி சென்னை விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
துபாயிலிருந்து சென்னை சா்வதேச விமானநிலையத்திற்கு ஃபிளை துபாய் சிறப்பு விமானம் இன்று காலை வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறையினா் சோதனையிட்டனா். அப்போது அந்த விமானத்தில் வந்த புதுக்கோட்டையை சோ்ந்த முகமது அப்துல்லா(40) என்ற பயணி, தன்னிடம் சுங்கத் தீா்வை செலுத்தும் பொருட்கள் எதுவும் இல்லை என்று கிரீன் சேனல் வழியாக வெளியே சென்றாா். சுங்கத்துறைக்கு அவா் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி சோதனையிட்டனா்.
முகமது அப்துல்லா முகத்தில் அணிந்திருந்த மாஸ்க் சற்று வித்தியாசமாக இருந்தது. இதையடுத்து அவருடைய மாஸ்க்கை கழற்றி சோதித்தனா். அதனுள் 85 கிராம் தங்க பேஸ்ட்டை ஒட்டி வைத்திருந்தாா். அதன் மதிப்பு ரூ.3 லட்சம். அதோடு அவருடைய பையில் ஐபோன்கள், லேப் டாப்களும் இருந்தன. அவைகளின் மதிப்பு ரூ.8.13 லட்சம். இதையடுத்து ரூ.11.13 லட்சம் மதிப்புடைய தங்கம், எலக்ட்ரானிக் பொருட்களை பறிமுதல் செய்தனா். அதோடு நூதனமான முறையில் கொரோனா வைரஸ் பாதுகாப்பிற்காக அணியும் மாஸ்க்கிற்குள் நூதனமான முறையில் தங்கம் கடத்தி வந்த பயணி முகமது அப்துல்லாவை கைது செய்து மேலும் விசாரணை நடத்துகின்றனா்.