அம்பத்தூர்: 500 நபர்களுக்கு காய்கறி, மளிகை பொருட்கள் வழங்கும் விழா -ஜோசப் சாமுவேல் எம்.எல்.ஏ பங்கேற்பு..!
தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 98வது பிறந்தநாளை முன்னிட்டு, அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் திமுக வின் அம்பத்தூர் தெற்கு பகுதி இளைஞர் அணி துணை அமைப்பாளர் மணிகண்டன் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள் கொண்ட தொகுப்பு 500 நபர்களுக்கு அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல் வழங்கினார். இந்நிகழ்வில் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.