அம்பத்தூர் : மின்மாற்றி வெடித்து விபத்து... 30 நிமிடங்களாக மின்சாரம் இன்றி பொதுமக்கள் பாதிப்பு
சென்னை : அம்பத்தூர் லெனின் நகர் 3வது மெயின் ரோடு பகுதியில் மின் மாற்றி வெடித்து சிதறி விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் அப்பகுதி முழுவதும் சுமார் 300 க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதியில் 30 நிமிடமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை கடுமையான அவதிக்கு ஆளாகியுள்ளனர். நடந்த பாதிப்பு குறித்து அப்பகுதி பொதுமக்கள் அம்பத்தூர் மின்வாரிய அதிகாரிகளை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டபோது எந்தவித பதிலும் அளிக்கவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டி உள்ளனர்.