அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் பால்வளத்துறை அமைச்சர்ஆய்வு
கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் ஐஸ்க்ரீம் உற்பத்தியை அதிகப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவு.
ஆவின் சார்பாக கோடை காலத்தினை கருத்தில் கொண்டு நடமாடும் ஐஸ்க்ரீம் விற்பனை வாகனத்தினை கடந்த சில தினங்களுக்கு முன் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் ஆகியோர் சென்னை எழிலகத்தில் வைத்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.
இதனையொட்டி அம்பத்தூர் ஆவின் பால்பண்ணையில் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் ஐஸ்கிரீம் உற்பத்தி அலகினை ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஐஸ்கிரீம் உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்கள் இருப்பு வைக்கவும் உத்தரவிட்டார். மேலும் லஸ்ஸி, மோர்,தயிர், மில்க் ஷேக் உள்ளிட்ட உப பொருட்களின் உற்பத்தியை அதிகரித்து வேக படுத்துவது குறித்தும் அமைச்சர் நாசர் ஆலோசனை வழங்கினார்.
நாள் ஒன்றுக்கு சுமார் 10ஆயிரம் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட அலகு ஆய்வின் போது ஐஸ்கிரீம், தயிர், மோர், லஸ்ஸி போன்ற பால் பொருட்களின் உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்கள் மற்றும் பேக்கிங் மெட்டீரியல்கள் இருப்பு வைக்கவும், தனியாருக்கு நிகராக ஐஸ்கிரீம் லஸ்ஸி, மில்க் ஷேக் விற்பனையை அதிகரிக்க அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
மேலும் பொதுமக்களுக்கு ஐஸ்கிரீம், மில்க் ஷேக், லஸ்ஸீ மோர் ,உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்யும்படி உத்தரவிட்டுள்ளார்.. இந்த ஆய்வின் போது ஆவின் நிர்வாக இயக்குனர் டாக்டர் சுப்பையன், இனை இயக்குநர் சராயு உள்பட அதிகாரிகள் ஊழியர்கள் உள்ளனர்.