6.53 கோடி பெண்கள் அரசு பஸ்களில் இலவச பயணம்; அமைச்சர் தகவல்
தமிழகம் முழுவதும் 6.53 கோடி பெண்கள் அரசு பஸ்களில் இலவச பயணம் செய்துள்ளதாக, போக்குவரத்து அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.;
தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது
திமுக தேர்தல் தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி பெண்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ள அனுமதி கொடுக்கிறார்கள்.
தமிழகம் முழுவதும் இதுவரை 6 கோடியே 53 லட்சம் பெண்கள் பயணித்துள்ளனர்.மேலும் திருநங்கைகள் மாற்றுத்திறனாளிகள் பேருந்துகளில் பயணம் செய்கிறார்கள்.
தினசரி 30 லட்சம் பேர் பயணம் செய்கிறார்கள் 40% பேர் பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது 60 சதவீதம் பேர் பயணம் செய்கிறார்கள்.
இப்போதைக்கு பேருந்துகளில் கட்டணம் அதிகரிக்க வாய்ப்புகள் இல்லை.ரூ. 5 கட்டணம் நிறுத்தப்பட்டதாக தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது.
வழக்கம்போல் ஐந்து ரூபாய் கட்டணம் மற்றும் பத்து ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆண்களிடம் கூடுதல் கட்டணம் வசுலிக்கப்படவில்லை என்றார்.