சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு கடன் வழங்க ஏ.ஐ.ஐ.பி. வங்கி ஒப்புதல்
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.2,650 கோடி கடன் வழங்க ஏ.ஐ.ஐ.பி. வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.2,650 கோடி கடன் வழங்க ஏ.ஐ.ஐ.பி. ஒப்புதல் அளித்துள்ளது. ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த 2016 முதல் ஆசிய உள்கட்டமைப்பு வங்கி நிதி உதவி செய்து வருகிறது. அந்த வகையில், சென்னை போக்குவரத்து மெட்ரோவின் உயர்தர உள்கட்டமைப்பை மேம்படுத்த கடன் வழங்கப்படும் என்று ஏஐஐபி வங்கி துணைத் தலைவர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.