தேர்தலுக்கு பிறகு ஊரடங்கு அமலுக்கு வருமா ? தமிழக அரசு தீவிர ஆலோசனை!

Update: 2021-03-29 06:30 GMT

தமிழகத்தில் தேர்தலுக்கு பிறகு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக சுகாதாரத்துறையினர் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 500-க்கும் கீழ் இருந்த நிலையில், தற்போது தினசரி பாதிப்பு 2 ஆயிரத்திற்கும் அதிகமாகியுள்ளது.

பள்ளி, கல்லூரிகள் திறப்பு , தேர்தல் பிரசாரத்தால் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதனை தடுக்கும் வகையில் ஏப்ரல் 2-வது வாரம் முதல் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக இரவு நேர ஊரடங்கு, தனியார் துறை ஊழியர்களை வீட்டில் இருந்து பணியமர்த்தல், மேலும் வழிபாட்டு தலங்கள், மத நிகழ்ச்சிகள், அரசியல், சமூக நிகழ்ச்சிகள் ஆகியவை நடத்த கட்டுப்பாடுகள் விதித்தல் போன்றவை அமல்படுத்தப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News