பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை: அமைச்சர் எச்சரிக்கை

தீபாவளியை முன்னிட்டு பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை என அமைச்சர் ராஜகண்ணப்பன் எச்சரித்துள்ளார்;

Update: 2021-10-19 11:30 GMT

அமைச்சர் ராஜகண்ணப்பன்

தீபாவளியை முன்னிட்டு பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை  அமைச்சர் ராஜகண்ணப்பன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து புகார் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார். மேலும், பொதுமக்கள் ஆம்னி பேருந்துகளுக்கான புகார் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 4256151 என்ற எண்ணில் புகார் செய்யலாம் என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News