முதல்வர் தாயார் குறித்த பேச்சு: ஆ.ராசா பிரச்சாரம் செய்ய தடை
முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து தேர்தல் பிரச்சாரத்தில் சர்ச்சைக்குரிய வகையில், தவறாக பேசியதற்காக ஆ.ராசா பிரச்சாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.;
திமுக எம்.பி. ஆ. ராசா தேர்தல் பரப்புரையின்போது, தரங்கெட்ட வகையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரின் தாயார் குறித்து அறுவருப்பபாக பேசியிருந்தார். நல்ல உறவில் சுகப்பிரசவத்திற்கு பிறந்தவர் ஸ்டாலின். கள்ள உறவில் பிறந்த குறைபிரசவம் ஈபிஎஸ் என மிகவும் தவறாக விமர்சித்து பேசி இருந்தார்.
இது கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானது. கட்சி பேதமின்றி அனைத்து தரப்பினரும் ராசாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர். தேர்தல் ஆணையத்திலும் புகார் கூறப்பட்டது
இச்சம்பவம் குறித்து ஆ.ராசா தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார். பின்னர் ராசா சார்பில், தேர்தல் ஆணையத்துக்கு நேற்று பதில் அனுப்பப்பட்டது. இதைத்தொடர்ந்து தேர்தல் ஆணையம் ராசா பிரச்சாரம் செய்ய தடை செய்து அறிவித்துள்ளது. அதன்படி, ராசா, அடுத்த 2 நாட்கள் பரப்புரை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.