சென்னை போரூர் கார்காத்தார் சங்கத்தின் 9ம் ஆண்டு விழா!
சென்னை போரூர் கார்காத்தார் சங்கத்தின் 9ம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது.;
இராமகிருஷ்ணா நகர் ஆர்.கே.சி., மஹாலில் நடைபெற்ற விழாவில், போரூர் கார்காத்தார் சங்கத் தலைவர் ஏ.ராமலிங்கம் வரவேற்றார். செயலாளர் எஸ்.சந்திரமோகன், பொருளாளர் கே.பரமசிவம் சங்க அறிக்கை மற்றும் நிதிநிலை அறிக்கை வாசித்தனர்.
கார்காத்தார் சங்க கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் கே.கே.ஆர்.கே. சுரேஷ், ஆன்மிக சொற்பொழிவாளர் பனசை அருணா, ஆண்டாள் சொக்கலிங்கம், கோ.எழிலன், டாக்டர் பி.மணிகண்டன், கைலை. சண்முகம், என்.முத்துகுமாரசாமி, சங்க கூட்டமைப்பின் மாநில நிர்வாகிகள், இணைப்புச் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் ஆன்மிகம் மற்றும் வேளாளர் இன சிறப்பு பற்றி விருந்தினர்கள் பேசினர். மேலும், 10 மற்றும் 12ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளித்து கௌரவிக்கப்பட்டது. சிறுவர்களுக்கான விளையாட்டு மற்றும் தனித்திறமையை வெளிப்படுத்தும் போட்டிகளும் நடைபெற்றன.
பரதநாட்டியம், திருக்குறள் வாசித்தல், நடனம் மற்றும் பல போட்டிகள் நடத்தப்பட்டு பரிசளிக்கப்பட்டது. செல்போனில் மூழ்கி இருப்பவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, கல்லூரி மாணவி அமிர்தா கூறிய சிறுகதை அனைவரையும் கவர்ந்தது. தீபா பரமசிவம் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.