4 புதிய நீதிபதிகள் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு நியமனம்
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு கூடுதல் நீதிபதிகளாக 4 பேரை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.;
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு கூடுதல் நீதிபதிகளாக 4 பேரை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கறிஞர்களாக பணியாற்றி வரும் மதி சுந்தரம், டி.பரத சக்ரவர்த்தி, ஆர்.விஜயகுமார், முகமது ஷபி ஆகிய 4 பேரையும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. அந்த பரிந்துரையை ஏற்று அந்த 4 பேரையும் சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று உத்தரவிட்டார். இவர்கள் நால்வருக்கும் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைப்பார் என்று கூறப்படுகிறது.