சென்னையில் காவல்துறை தணிக்கையில் வரம்பு மீறி பேசிய பெண்மணி -வைரலாகும் வீடியோ
சென்னை சேத்துப்பட்டு பகுதியில் போக்குவரத்து போலீசாரை மிரட்டிய புகாரில் பெண் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.;
சென்னை சேத்துப்பட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவலரை வாகனம் ஓட்டி வந்த பெண் மரியாதை குறைவாக பேசி சென்றது வாட்ஸ் அப்பில் வைராலாகி வருகிறது.
சென்னை சேத்துப்பட்டில் இன்று 06.06.2021 காலை 07:46 மணியளவில் G7 சேத்துப்பட்டு சிக்னலில் போக்குவரத்து தலைமை காவலர் 43317 ஆனந்த் என்பவரது தலைமையில் 3 பேர் (HC பிரபாகரன், HC ரஞ்சித் குமார்) ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சேத்துப்பட்டு குருசாமி பாலத்தில் இருந்து நுங்கம்பாக்கம் மார்க்கமாக செல்லும் வழியாக வந்து கொண்டிருந்த TN.01 BK 7688 என்கிற மாருதி ஆல்டோ காரினை நிறுத்தி தணிக்கை செய்தனர்.
அப்போது காரில் பயணம் செய்த பெண் ஒருவரை காவலர்கள் விசாரணை செய்தபோது மெரீனா கடற்கரைக்கு மீன் வாங்க செல்வதாக தெரிவித்துள்ளார் அதற்கு காவலர்கள் தரப்பில் லாக்டவுன் நேரத்தில் தேவையில்லாமல் வெளியில் போக கூடாது எனவே உங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். உங்களுடைய லைசென்ஸ் வேண்டும் என கேட்டதும் காரில் வந்த பெண் காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் அவரது உறவினர்(அம்மா மற்றும் அண்ணன்) போன் செய்து அழைத்துள்ளார்.
வீடியோ பார்க்க
https://m.facebook.com/story.php?story_fbid=4296107953772817&id=107274788081681
அவரும் வந்தவுடன் தான் ஒரு வழக்கறிஞர் என தெரிவித்ததோடு உன்னை என்ன செய்கிறேன் பார் என தெரிவித்ததோடு நீ,வா,போ,என ஒருமையில் பேசியுள்ளார். பின்னர் அபராதம் விதிக்கப்பட்டதும் (Rs.500)அதற்கு உண்டான ரசீதினை தூக்கியெறிந்து சென்றுள்ளார்.இது சம்பந்தமான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது
இந்நிலையில் தற்போது (மாலையில்) .சென்னை சேத்துப்பட்டு பகுதியில் போக்குவரத்து போலீசாரை மிரட்டிய புகாரில் பெண் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://m.facebook.com/story.php?story_fbid=4296107953772817&id=107274788081681