தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்குமென சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தின் கடலோரத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை நீடிக்கும் என்றும், 18 ஆம் தேதி முதல் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும் என்றும் 19 ஆம் தேதிக்கு பின்னர் வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வரும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.