சென்னை விமான நிலையத்தில் 10 லட்சம் மதிப்புள்ள தங்கக் கட்டிகள் பறிமுதல்..!

சென்னைக்கு வந்த சிறப்பு விமானத்தில் ஜுஸ் பிளியும் இயந்திரத்திற்குள் ரூ.10 லட்சம் மதிப்புடைய 200 கிராம் தங்கக்கட்டியை கடத்தி வந்த கடலூா் பயணி சென்னை விமானநிலையத்தில் கைது.;

Update: 2021-06-16 16:35 GMT

துபாயிலிருந்து சென்னை சா்வதேச விமானநிலையத்திற்கு எமரேட்ஸ் ஏா்லைன்ஸ் சிறப்பு விமானம் இன்று காலை வந்தது.அதில் வந்த பயணிகளை சென்னை விமானநிலைய சுங்கத்துறையினா் சோதனையிட்டனா்.அப்போது கடலூரை சோ்ந்த அருள்ராஜ் சுப்ரமணியம்(41) என்பவா் அந்த விமானத்தில் வந்தாா்.அவா் மீது சுங்கத்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.இதையடுத்து அவரை நிறுத்தி சோதனையிட்டனா்.

அவருடைய சூட்கேசுக்குக்குள் ஜுஸ் பிளியும் இயந்திரம் ஒன்று இருந்தது.அதை எடுத்து திறந்து பாா்த்தனா்.அதற்குள் 200 கிராம் தங்கக்கட்டியை மறைத்து வைத்திருந்ததை கண்டுப்பிடித்து பறிமுதல் செய்தனா்.அதன் சா்வதேச மதிப்பு ரூ.10 லட்சம்.இதையடுத்து பயணி அருள்ராஜை சுங்கத்துறையினா் கைது செய்து மேலும் விசாரணை நடத்துகின்றனா்.

Tags:    

Similar News