அதிமுக முன்னாள் எம்எல்ஏ காலமானார்

கொரோனா தொற்றால் பாதிப்பு.;

Update: 2021-05-12 13:28 GMT

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ வி.எஸ்.ராஜி காலமானார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவர் 2011 தேர்தல் செய்யூர் தொகுதியில் இருந்து சட்டப்பேரவைக்குத் தேர்வு செய்யப்பட்டு 2011-16 காலகட்டத்தில் ஜெயலலிதா அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தார். தற்போது ஆலத்தூர் ஒன்றிய கழகச் செயலாளராக உள்ளார்.

இவரது மறைவிற்கு அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News