காதலி- காதலியின்தயோடு தன்னையும் எரித்து கொண்ட இளைஞன்
காதலித்த பெண்ணை வேறொருவருக்கு நிச்சயம் செய்ததால் காதலி, காதலியின் தாயை மண்ணெண்ணை ஊற்றி கொளுத்தி தானும் கொளுத்தி கொண்ட இளைஞர்.;
சென்னை கொருக்குப்பேட்டை அனந்த நாயகி தெருவை சேர்ந்தவர் சதீஷ் என்கின்ற பூபாலன் இவர் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரும் அதே பகுதியை சேர்ந்த ரஜிதா என்றும் பெண்ணும் காதலித்து வந்தனர். இதற்கு அவரது தாய் வெங்கட்டம்மாள் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.
இந்நிலையில் ரஜிதாவிற்க்கு வேறொருவருடன் நிச்சயதார்த்தம் செய்தார். இதனால் ஆத்திரமடைந்த பூபாலன் தனது காதலி வீட்டிற்கு மண்ணெண்ணெய் கேனுடன் சென்று அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
வாக்குவாதம் முற்றவே மண்ணெண்ணையை தனது காதலி ரஜிதா மீதும் அவரது தாய் வெங்கட் அம்மாள் மீதும் ஊற்றி தீ வைத்துக் கொண்டு தனக்கும் தீவைத்து கொளுத்தி கொண்டார். தீயின் வேகம் வீடு முழுவதும் பரவத் தொடங்கியது. இவர்கள் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் காப்பாற்ற முயற்சி செய்தும் மூவரும் தீயில் உடல் கருகி உயிரிழந்தனர். இதுகுறித்து கொருக்குப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.