பல்லாவரத்தில் நடந்து சென்ற பெண்ணிடம் செல்போனை பறித்த வாலிபர் கைது
பல்லாவரத்தில் நடந்து சென்ற பெண்ணிடம் செல்போனை பறித்த வாலிபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.;
செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் அடுத்த பம்மல், நாகல்கேணி பகுதியில் நடந்து சென்ற செளந்தர்யா என்ற பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் செல்போனை பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டனர்.
இது குறித்து செல்போனை பறிகொடுத்த தனியார் நிறுவன ஊழியரான செளந்தர்யா சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, ஆய்வாளர் ராஜ்குமார் தலைமையில், உதவி ஆய்வாளர் கஜேந்திரன், தலைமை காவலர்கள், தினேஷ் குமார், சுரேஷ், காவலர் மணிகண்டன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள் பெயிண்டர் வேலை செய்யும் குன்றத்தூரை சேர்ந்த டேனியல்(23), மற்றும் மடிப்பாக்கத்தை சேர்ந்த சகாயராஜ்(47), என்பதும் தெரியவந்தது. இருவரும் உறவினர்கள், டேனியலின் சித்தப்பா தான் சகாயராஜ் இருவரும் ஒன்றாக மது குடிக்கும் பழக்கம் கொண்டவர்கள்,
அப்படி இருவரும் நேற்று சகாயராஜ் வீட்டில் மது அருந்திவிட்டு பின்னர் டேனியலை வீட்டில் விடுவதற்காக இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றுள்ளார்.
அப்போது திருநீர்மலை சாலை, நாகல்கேணி அருகே சென்ற போது பெண் ஒருவர் செல்போன் பேசிக் கொண்டு சென்றதை கண்ட டேனியலுக்கு தனக்கு செல்போன் இல்லையே என்ற ஏக்கம், நேற்று யூடியூப்பில் செல்போனை பறிப்பு குறித்து பார்ததும் எப்படியாவது இந்த செல்போனை பறித்துவிட வேண்டும் என எண்ணி செல்போனை பறித்து விட்டார். ஏதும் தெரியாதா சித்தப்பா என்னட்டா செய்தாய் என்று கேட்க எனக்கு தான் செல்போன் இல்லையல்லவா அதான் செல்போனை பறித்துவிட்டதாக கூறினார்.
திரும்ப செல்போனை கொடுக்க சென்ற போது பொதுமக்கள் கூடியதால் பயந்து போய் தப்பிச் சென்றனர். பின்னர் போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து வாகன பதிவெண் மூலம் இருவரையும் கைது செய்து, செல்போன், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.