பிளாஸ்டிக் பைகளை தவிர்க்கும் வகையில் மீண்டும் மஞ்சப்பை பயன்பாடு
தாம்பரத்தைச்சேர்ந்த சமூக ஆர்வலர் மதன் என்பவர் மஞ்சப்பை வேடம் அணிந்து இருசக்கர வாகனத்தில் தலைமைச் செயலகம் வரை பயணித்தார்;
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் பிளாஸ்டிக் பைகளை தவிர்க்கும் வகையில் மீண்டும் மஞ்சப்பை, என்ற திட்டத்தை கொண்டு வந்தார்,.
இதனைத் தொடர்ந்து, தாம்பரத்தை அடுத்த மணிமங்கலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மதன் என்பவர், மஞ்சப்பை வேடம் அணிந்து இருசக்கர வாகனத்தில் மணிமங்கலத்தில் இருந்து தலைமைச் செயலகம் வரை, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்றார். அப்போதும் தாம்பரம் பகுதியில் உள்ள கடைகளுக்கு சென்று பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து முதல்வர் அறிவித்தது.. போல் மஞ்சள் பைகளை பயன்படுத்த வேண்டும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி அரசுக்கு ஒத்துழைக்கும்படி கேட்டுக்கொண்டார்.