தாம்பரத்தில் இஸ்திரி போட்டு கொடுத்து தி.மு.க. வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
தாம்பரம் மாநகராட்சி 33- வது தி.மு.க. வேட்பாளர் செ.சுரேஷ் துணிகளை இஸ்திரி செய்து கொடுத்து வாக்கு சேகரித்தார்.;
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி 33 வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செ.சுரேஷ் தீவிர வாக்கு சேகரித்தார்.
இன்று காலை தாம்பரம் சானடோரியம் பகுதியில் உதயசூரியன் சின்னத்திற்கு பொது மக்களை சந்தித்து வாக்குகள் சேகரித்தார். அப்போது இஸ்திரி கடை ஒன்றுக்கு வாக்கு சேகரிக்க சென்ற வேட்பாளர் சுரேஷ் இஸ்திரி செய்து கொடுத்து வாக்குகளை சேகரித்தார். தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் தி.மு.க.வின் சாதனைகளை எடுத்து கூறி பொது மக்களிடம் உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.