மாநகராட்சி சுகாதார அலுவலர் பணியிடை நீக்கம்: நகராட்சி நிர்வாக ஆணையர் உத்தரவு

அலுவலக கோப்புகளில் போலியாக போட்டதாக சுகாதார அலுவலர் மொய்தீன் மீது நகராட்சி நிர்வாக இயக்குனருக்கு புகார் வந்ததுள்ளது;

Update: 2022-01-01 09:30 GMT

பைல் படம்

தாம்பரம் மாநகராட்சி சுகாதார அலுவலர் பணியிடை நீக்கம் செய்து நகராட்சி நிர்வாக ஆணையர் உத்தரவிட்டார்
சென்னையை அடுத்த தாம்பரம் மாநகராட்சி சுகாதார அலுவலராக பணிபுரிந்து வருபவர் மொய்தீன்.தாம்பரம் நகராட்சியாக இருந்தபோது ஆணையாளராக பணியாற்றிய சித்ரா என்பவரின் கையெழுத்தை அலுவலக கோப்புகளில் போலியாக போட்டதாக சுகாதார அலுவலர் மொய்தீன் மீது நகராட்சி நிர்வாக இயக்குனர் அலுவலகத்திற்கு புகார் வந்ததுள்ளது.இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் போலியாக அலுவலக கோப்புகளில் கையெழுத்து போட்டது தெரியவந்ததால் நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா நடவடிக்கை எடுத்தார்.போலியாக கையெழுத்துப் போட்ட சுகாதார அலுவலர் மொய்தீனை பணியிடை நீக்கம் செய்து நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா உத்தரவிட்டார்.

Tags:    

Similar News