பீஸ்ட் வெற்றி கொண்டாட்டம்: விஜய் மக்கள் இயக்கத்தினர் காெடுத்த இன்ப அதிர்ச்சி
பீஸ்ட் வெற்றியை கொண்டாடும் வகையில் படம் பார்க்க வந்த 100 பேருக்கு தலா 1 லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கிய விஜய் ரசிகர்கள்.;
தாம்பரத்தில் பீஸ்ட் வெற்றியை கொண்டாடும் வகையில் படம் பார்க்க வந்த 100 பேருக்கு தலா ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கிய விஜய் ரசிகர்கள்.
நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் இன்று வெளியானது. ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியான திரைப்படத்தை விஜய் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் பெருங்களத்தூர் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் தலைமையில் தாம்பரம் நேசனல் தியேட்டரில் பீஸ்ட் திரைப்படம் பார்க்க வந்தனர்.
பின்னர் திரைப்படத்தை பார்த்து வெளியே வந்த ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் 100 பேருக்கு தலா ஒரு லிட்டர் பெட்ரோலை விஜய் ரசிகர்கர்கள் வழங்கினார். நாளுக்கு நாள் விலையேறும் பெட்ரோலை விஜய் ரசிகர்கள் வழங்கியது பொதுமக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.